சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து ராம்பாலா தற்போது 'மிர்ச்சி' சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
'இடியட்' படத்தில் சிவா - நிக்கி கல்ராணியுடன் ஊர்வசி, ஆனந்த் ராஜ், மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
-
#IDIOT Trailer Hits 4.5 Million+ Views. Releasing Soon in Theaters.
— Screen Scene (@Screensceneoffl) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/pa518RLs7N
">#IDIOT Trailer Hits 4.5 Million+ Views. Releasing Soon in Theaters.
— Screen Scene (@Screensceneoffl) July 24, 2021
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/pa518RLs7N#IDIOT Trailer Hits 4.5 Million+ Views. Releasing Soon in Theaters.
— Screen Scene (@Screensceneoffl) July 24, 2021
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/pa518RLs7N
ட்ரெய்லரில், பேயை சிவா கலாய்ப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த ட்ரெய்லரை இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.