வானொலி பண்பலை தொகுப்பாளராகப் பணியாற்றிய சிவாவை இயக்குநர் வெங்கட் பிரபு 'சென்னை 28' படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் 'சரோஜா', 'கலகலப்பு', 'தமிழ்ப்படம்', 'தில்லு முல்லு', 'வணக்கம் சென்னை' உள்ளிட்ட பல படங்களில் சிவா தனது வித்தியாசமான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தனக்கான இடத்தைப் பிடித்தார். இவருக்கு ரசிகர்கள் அகில உலக சூப்பர்ஸ்டார் என்னும் பட்டத்தை கொடுத்துள்ளனர்.
-
Need all ur wishes and prayers happy Deepawali https://t.co/pHfawl9b6y
— Shiva (@actorshiva) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Need all ur wishes and prayers happy Deepawali https://t.co/pHfawl9b6y
— Shiva (@actorshiva) November 14, 2020Need all ur wishes and prayers happy Deepawali https://t.co/pHfawl9b6y
— Shiva (@actorshiva) November 14, 2020
தொடர்ந்து சினிமாவில் பிஸியாகி வரும் சிவா ராம்பாலா இயக்கும் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் சிவாவுடன் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இதனைத்தொடர்ந்து முத்துக்குமரன் இயக்கும் 'சலூன்' என்னும் திரைப்படத்தில் சிவா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் சிவாவுடன் யோகிபாபுவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ளது. இதில் நடிக்கவுள்ள நாயகி, மற்ற கதாபாத்திரங்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.