சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து ராம்பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி வகையிலான படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது, விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
-
#Aarambikalaama
— Screen Scene (@Screensceneoffl) April 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Horrific feast begins #IDIOT - trailer out now.
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/RIpqmEKqYu
">#Aarambikalaama
— Screen Scene (@Screensceneoffl) April 25, 2021
Horrific feast begins #IDIOT - trailer out now.
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/RIpqmEKqYu#Aarambikalaama
— Screen Scene (@Screensceneoffl) April 25, 2021
Horrific feast begins #IDIOT - trailer out now.
▶️ https://t.co/OVYZgm8l6S@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/RIpqmEKqYu
இடியட் படத்தில் சிவா - நிக்கி கல்ராணியுடன் ஊர்வசி, ஆனந்த் ராஜ், மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரில், பேயை சிவா கலாய்ப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.