ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருபவர் மில்லா ஜோவோவிச். அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இவர் 10 வயதில் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். இவருக்கும், இயக்குநர் பவுல் டபிள்யூ.எஸ். ஆண்டர்சனுக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இத்தம்பதியின் மகள் எவர் காபோ ஆண்டர்சன் தனது 13 வயதில் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். இதனை மிகவும் பெருமையாகப் பார்ப்பதாக நடிகை மில்லா ஜோவோவிச் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ”ரெசிடென்ட் ஈவில் கடைசி பட பாகத்தில் எனது மகள் நடித்தார். அவரது அப்பாவும், இயக்குநருமான பவுல் டபிள்யூ.எஸ். ஆண்டர்சன் இப்படத்தை இயக்கினார். அவள் நடித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நமது பிள்ளைகளும், நமது பாதையைப் பின்பற்றுவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. எனக்கு இதைவிடச் சிறந்தது வெறும் எதுவுமில்லை.
ரசிகர்களை எனது மகள் அவளது திறமையால் ஈர்த்துவிட்டாள். அவளுக்கு இயல்பாகவே திறமை அதிகம் என்பதால், எதையும் அவரால் எளிதில் செய்துமுடிக்க முடியும். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எனது மகளுக்குச் செய்வேன். அவளது படத்தை திரையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.