ரெக்கிங் பால் (Wrecking Ball), வி கான்ட் ஸ்டாப் (We cant stop) போன்ற பிரபல ஆல்பங்களின் பாப் பாடகியும், நடிகையுமான மிலே சிரஸ் தனது தந்தைக்கு வாங்கி கொடுத்த புதிய ஐபோன் பற்றி சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “சமூக வலைதளத்தில் நானும் என் தந்தையும் தொலைதூரத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக புதிய ஐபோனை என் தந்தைக்குப் பரிசளித்தேன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவருக்குத் தெரியாது.
என் அப்பாவிடம் இரண்டு பிளாக் பெரி போன்கள் உள்ளன. அது எதற்கு என்று கேட்டால் இரண்டு பிளாக் பெரி போன்கள் ஒரு ஐபோனுக்கு சமம் என்பார். இதைக் கேட்டால் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். பேஸ்டைம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று எனது பாட்டிக்கு தெரியும். ஆனால் என் அப்பாவுக்கு தெரியவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது” என்றார்.