வாஷிங்டன்: நீண்ட சர்ச்சைக்குப் பிறகு பாடகி மைலி சைரஸ் - நடிகர் லியம் ஹெமஸ்வர்த் இணைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இந்த நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து மனுவை ஏற்றுக்கொண்டு ஜனவரி 29ஆம் ஆண்டு திருமணத்தை ரத்துசெய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் மைலி சைரஸ் - லியம் ஹெம்ஸ்வர்த் ஆகியோர் திருமண முறிவு உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டனர்.
லியம் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டதால் மைலி நிம்மதி அடைந்திருப்பதுடன், தற்போது தனது வழியில் செல்லவிருக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி எட்டு மாதங்களான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மைலியிடமிருந்து விவாகரத்து வேண்டி நடிகர் லியம் ஹெம்ஸ்வர்த் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து தற்போது நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
தி லாஸ்ட் சாங் என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் முதல் முறையாக பாடகி மைலி சைரஸ் - நடிகர் ஹெம்ஸ்வர்த் ஆகியோர் முதன்முறையாக சந்தித்தனர். இதையடுத்து 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், 2013ஆம் செப்டம்பர் மாதம் தங்களது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தங்களது உறவை மீண்டும் புதுப்பித்து, 2018 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிரிவதும், சேர்வதுமாக இருந்த இவர்களது உறவு குறித்து ஹாலிவுட்டில் சர்ச்சை எழுந்தது. தற்போது இவர்களது மணவாழ்க்கை மீண்டும் பிரிவுக்கு வந்துள்ளது.