மும்பை: நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் செப்.3ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிரபல மாடல் அழகி நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதேபோல, இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் டிவி நடிகரான ஈஷான் ஷெகல், நடிகையும் மாடலுமான மீஷா ஐயர் இருவரும் ஒரு வாரத்திற்குள் நெருக்கமாகிவிட்டனர்.
இந்நிலையில், அவர்கள் பிக் பாஸ் வீட்டில் ஆங்காங்கே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ புரோமோவாக வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து நெட்டிசன்கள், தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒருபடி மேலே சென்று லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கிண்டல் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பிக்பாஸில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை