ETV Bharat / sitara

2 மில்லியன் அமெரிக்க டாலர் - மைக்கேல் ஜாக்சன் இளையமகன் வாங்கிய ஆடம்பர வீடு

author img

By

Published : Mar 3, 2020, 4:26 PM IST

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இளைய மகன் பிளாங்கெட் ஜாக்சன், ஆடம்பர வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

Michael Jackson's youngest son buys mansion worth USD 2 million
Michael Jackson's youngest son Blanket Jackson

வாஷிங்டன்: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இளைய மகன் பிளாங்கெட் ஜாக்சன் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வீட்டினை வாங்கி குடிபெயர்ந்துள்ளார்.

கலிஃபோர்னியா மாகணத்தில் கலாபஸாஸ் பகுதியில் புதிய வீட்டை வாங்கியுள்ளார். 18 வயதாகும் பிளாங்கெட் ஜாக்சன் வாங்கிய வீட்டின் மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

கண்ணைக் கவரும் விதமாக இருக்கும் இந்த வீடு 6 ஆயிரத்து 832 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஆறு படுக்கையறையுடன், 7 குளியல் அறையும் வீட்டில் இருக்கிறது. அத்துடன் அசத்தலான நீச்சல் குளம், வெளிப்புறத்தில் சமையல் செய்வதற்கு உகந்தவாறு அறை, மூடப்பட்ட உட்பகுதி முற்றம் என, பார்ப்பவர்கள் வாய் பிளக்கும் விதமாக இந்த வீடு கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிளாங்கெட் ஜாக்சனின் பாட்டி கேதரின் ஜாக்சன் வீட்டுக்கு மிக அருகிலேயே இந்த வீடு அமைந்துள்ளது. சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய இவர், இந்த ஆடம்பர வீட்டினை வாங்கியுள்ளார். பிளாங்கெட் ஜாக்சன் என்று இவருக்கு மறைந்த பாப் பாடகர் மைக்கெல் ஜாக்சன் பெயர் வைத்தார்.

ஆனால் இவரது பெயர் பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன் 2 என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தற்போது அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தனது சகோதர, சகோதரிகளுடன் யூடியூப்பில் சினிமாக்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியில் ஒன்றில் தோன்றி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.