ETV Bharat / sitara

நெட்ஃப்ளிக்ஸின் புதிய படத்தில் ஒன்றிணையும் ஹாலிவுட் நட்சத்திரப் பட்டாளம்! - ஹாலிவுட் நட்சத்திரப் பட்டாளம்

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரென்ஸ், டிமோதி ஷாலமெட் என ஹாலிவுட்டின் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

லியனார்டோ டிகாப்ரியோ மெரில் ஸ்ட்ரீப் டிமோதி ஷாலமெட்

author img

By

Published : Oct 15, 2020, 3:47 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில், ஆடம் மெக்கே இயக்கும் ’டோண்ட் லுக் அப்’ எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தில் டிகாப்ரியோவுடன் மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரென்ஸ், டிமோதி ஷாலமெட் என ஹாலிவுட்டின் பிற பிரபல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

நகைச்சுவை ஜானரில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ’ஃப்ரெண்ட்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் புகழ் நடிகர் மேத்யூ பெர்ரி, பாடகி அரியானா க்ராண்டே, ஜான் ஹில், ஹிமேஷ் படேல், ராப்பர் குடி என ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பூமியை அழிக்கவரும் விண்கல் குறித்து, ஊடங்கங்களில் தோன்றி எச்சரிக்கும் இரண்டு விஞ்ஞானிகளைச் சுற்றி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஞ்ஞானிகளாக டிகாப்ரியோவும் ஜெனிஃபர் லாரன்ஸும் படத்தில் தோன்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மனநலம் பேணுதல் பயணத்திற்கு அழைப்பு விடுக்கும் ஆமிர்கான் மகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.