ETV Bharat / sitara

'உயிருள்ளவரை உங்க உதவியை மறக்க மாட்டேன் சிரஞ்சீவி அண்ணே' - பொன்னம்பலம் - நடிகர் சிரஞ்சீவி

சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகர் சிரஞ்சீவிக்கு, நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Megastar
Megastar
author img

By

Published : May 21, 2021, 9:10 PM IST

தமிழ்த் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துப்புகழ் பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். கமல், ரஜினி, விஜயகாந்த் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் 'பிக்பாஸ் 2' சீசனிலும் கலந்துகொண்டார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் பொன்னம்பலம் சிறுநீரகக் கோளாறு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அப்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த பொன்னம்பலத்தின் மருத்துவச் செலவையும்; அவரது குழந்தைகளின் படிப்பு செலவையும் நடிகர் கமல் ஹாசன் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பொன்னம்பலத்துக்கு சிறுநீரகம் அதிகம் பாதிப்படைந்ததால் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதற்கான செலவுக்கு தெலுங்கு மெகா ஸ்டாரும் நடிகருமான சிரஞ்சீவி உதவியுள்ளார்.

இதுகுறித்து பொன்னம்பலம் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ. 2 லட்சம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார் நன்றி அண்ணே" என்று கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலக தொழிலாளர்கள் கரோனா நெருக்கடியில் வேலையிழந்தபோது சிரஞ்சீவி அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தொழிலாளர்களுக்கும் நலிவடைந்த கலைஞர்களுக்கும் தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.