ETV Bharat / sitara

ஜூனியர் என்டிஆர்-ஐ தெரியாத காரணத்தால் நடிகைக்கு வந்த மிரட்டல் - ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு எதிராக மீரா சோப்ரா புகார்

ஜூனியர் என்டிஆர்-ஐ தெரியாது என்று சொன்ன காரணத்தால் அவரது ரசிகர்கள் கொந்தளிப்புக்கு உள்ளாகி, மீரா சோப்ராவுக்கு மானபங்கம், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அவர் சைபர் குழுவில் புகார் அளித்துள்ளார்.

Actress Meera Chopra
Meera Chopra complant in cyber cell
author img

By

Published : Jun 3, 2020, 7:17 PM IST

மும்பை: ஜூனியர் என்டிஆர் யாரென்று தெரியாது எனக் கூறிய நடிகை மீரா சோப்ராவை, நடிகரின் ரசிகர்கள் ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளனர்.

எஸ்ஜே சூர்யாவுடன் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமான நடிகை மீரா சோப்ரா தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது, ஜூனியர் என்டிஆர் பற்றி உங்களது கருத்தை கூறுங்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு அவரை தெரியாது. நான் அவரது ரசிகையும் இல்லை என்று பதிலளித்தார்.

அவரது இந்த பதில் என்டிஆர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், மீரா சோப்ராவை குறிவைத்து தகாத வார்த்தைகளாலும், கிண்டல்களாலும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டனர். சிலர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இது குறித்து மீரா சோப்ரா கூறியதாவது:

மீராவைக் கேளுங்கள் என்ற தலைப்பில் ரசிகர்களுடன் உரையாடல் நிகழ்த்தினேன். அப்போது ரசிகர் ஒருவர் தென்னிந்திய சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டார். அதற்கு மகேஷ் பாபு என்று பதில் அளித்தேன். பின் ஒருவர் உங்களுக்கு ஜூனியர் என்டிஆர்-ஐ பிடிக்குமா என்று கேட்டபோது, எனக்கு அவரை தெரியாது. நான் அவர் ரசிகை இல்லை என்றேன். அடுத்த சில நிமிடங்களில் மானபங்கம், கொலை மிரட்டல், குடும்பத்தினர் மீது தாக்குதல் என பல்வேறு விதங்களில் தாக்கப்பட்டேன்.

ஒரு சிலர் ஆபாச நடிகைகளுடன் என முகத்தை இணைத்து புகைப்படங்கள் வெளியிட்டனர். தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட் பதிவுகள் என்னை தாக்கி பதிவாகின. சமூக வலைத்தளத்திலும் சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லையா? ஒருவரது ரசிகையாக இல்லாமல் இருப்பது எந்த அளவு பெரிய குற்றமாகும்? நாம் அனைவரையும் விரும்புவது இயலாத காரியம்.

இந்த விவகாரம் பற்றி சைபர் குழுவினரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளேன். பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு தாங்களே முன்வந்து சண்டையிட வேண்டும். ஒரு பெண்ணின் குணத்தை தவறாக சித்தரிப்பதும், மிரட்டல் விடுப்பதும், அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்துவதும் தவறான செயலாகும்.

என் மீது தாக்குதல் நடத்திய நபர்கள்தான் வெளி உலகில் நடக்கும் கற்பழிப்பு போன்று குற்றங்களை செய்பவர்களாக இருக்கிறார்கள். எனவே நான் அவர்களை எதிர்த்தது போல் பலரும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது அவசியமாகும். இதுபோன்ற மாறுபட்ட ரசிகர்களைக் கொண்ட நடிகர்களை எண்ணி வருந்துகிறேன். இப்படிப்பட்ட ரசிகர்களை நேரில் சந்தித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு நடிகர்கள் அறிவுரை வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது இந்திப் படங்களில் நடித்து வரும் மீரா சோப்ரா, தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், நாகர்ஜூனா ஜோடியாகவும் நடித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.