மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் உடனான கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மதில்'. இந்தப் படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார்.
இந்தத் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளமான ’ஜீ 5’ தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில், இயக்குநர் மித்ரன் ஜவஹர், இயக்குநர் - நடிகர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் மைம் கோபி, நடிகை மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். கடினமாக உழைத்து, சிறுகச் சிறுக சேமித்து, சொந்த வீடு கட்டும் அனைவரது கதையாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.