இன்று (ஜுன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் உள்ளனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்த ரசிகர்கள் விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்திலிருந்து அப்டேட் வருமா என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதற்கு வழிவகை செய்யும் வகையில் 'மாஸ்டர்' படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் ஒன்றை வைக்கும் வகையில் படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது. 'கொளுத்துங்கடா' என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த போஸ்டரில், நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார் விஜய். அவரைச் சுற்றி பலரும் நடனமாடுகின்றனர்.
![master team releases poster for vijay birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-vijay-birthdayspecial-poster-7204954_22062020004738_2206f_1592767058_1008.jpg)
கடந்த ஏப்ரல் மாதமே 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
தற்போதும் இதே நிலை நீடிப்பதால், படம் தீபாவளிக்குத்தான் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க...பிகிலை முறியடித்த 'மாஸ்டர்'