'மாஸ்டர்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் இதுகுறித்து சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகவும் ரங்கதாஸ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரங்கதாஸை தொடர்புகொண்டு பேசியபோது, "நான் கடந்த 2017ஆம் ஆண்டு 'நினைக்கும் இடத்தில் நான்' என்ற பெயரில் ஒரு கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் எப்படி மாணவர்கள் மத்தியில் வாத்தியாக போற்றப்படுகிறார் என்பதே கதை.
ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' கதையும் எனது கதையும் ஒரே மாதிரி உள்ளதால், இதுகுறித்து எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து அசோசியேசனிடம் புகார் அளித்துள்ளேன். எனது கதை போன்றே வேறுபடம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளேன். அசோசியேசன் தரும் பதிலை பொறுத்து, அடுத்தக்கட்டமாக நீதிமன்றம் செல்லும் முயற்சியில் உள்ளேன்" என்றார்.

ரங்கதாஸ் ஏற்கனவே விஜய்யின் 'கத்தி' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... எந்திரன் பட கதை திருட்டு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஷங்கரின் மனு தள்ளுபடி!