தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் ஒன்றின் பெயரில் செயல்படும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் இவரை நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று நீக்கிவிட்டனர்.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13480406_dd.jpg)
இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13480406_tha.jpg)
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளோம்.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13480406_thama.jpg)
ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13480406_thamad.jpg)
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தமன்னா மீது வழக்கு தொடர்ந்ததால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13480406_thamadssd.jpg)
இதையும் படிங்க : இது எந்த இடம்? ஒத்த ஆளாக கெத்து காட்டிய அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!