மலையாளத்தின் முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ளத் திரைப்படம் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam).
இதில் அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், சுஹாசினி, சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, முகேஷ், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில், 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடுக்கடலில் நவீன ஆயுதங்களால் ஆங்கிலப்படை ஒருபக்கம் நிற்க, மரையக்காயரின் நாட்டுப்படை மற்றொரு பக்கம் நின்று போர் செய்கின்றனர். மேலும் ட்ரெய்லர் முழுவதும் இடம்பெற்றுள்ள வலிமையான வசனங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் நாளை (டிசம்பர் 2) வெளியாகிறது. ஏற்கனவே, இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் என மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது.
இதையும் படிங்க: நாய் சேகர் படக்குழுவில் இணையும் சிவகார்த்திகேயன்?; நடிகர் சதீஷ் உருக்கம்!