ETV Bharat / sitara

தரைமட்டமாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு - 'மராடு 357' செகன்ட் லுக் போஸ்டர் - 'மராடு 357' பட அப்டேட்

இயக்குநர் கண்ணன் தாமரகுளம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மராடு 357' படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Maradu
Maradu
author img

By

Published : May 16, 2020, 4:53 PM IST

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மராடு பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. இந்த இரண்டு கட்டடங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அக்கட்டடங்கள் ஜனவரி மாதம் எமல்ஷன் வெடிப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு, தகுந்த பாதுகாப்புடன் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து த்ரில்லர் ஜெனரில் 'மராடு 357' என்று படம் உருவாகி வருகிறது.

இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தாலும் சில புனைவுகளையும், இதில் இணைத்துள்ளதாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இயக்குநர் கண்ணன் தாமரகுளம் இயக்கும் இப்படத்தில், அனூப் மேனன், தர்மஜன் போல்கட்டி, நூரின் ஷெரீப், மனோஜ் கே ஜெயன், பைஜு சந்தோஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஆபிரகாம் மேத்யூ - சுதர்சனன் காஞ்சிராம்குளம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தினேஷ் பல்லத்து திரைக்கதை எழுதியுள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. தேசிய ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதும், அப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் - தமிழ்நாட்டில் கேரள காவல்துறையினர் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.