ETV Bharat / sitara

Case against Mansoor Alikhan: நடிகை சொத்தை அபகரிக்க முயன்ற மன்சூர் அலிகான்? - மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு

Case against Mansoor Alikhan: மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயன்றதாக, மன்சூர் அலிகானுக்கு எதிராக சொத்தாட்சியர் சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Case against Mansoor Alikhan
Case against Mansoor Alikhan
author img

By

Published : Dec 28, 2021, 8:51 PM IST

Case against Mansoor Alikhan: சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்‌ஷன் கதாநாயகியுமானவர் கே.டி.ருக்மணி. இவருக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 1996ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகியை நியமித்து தமிழ்நாடு அரசின் சொத்தாட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி கே.டி.ருக்மணி அம்மாளுக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார். சமீபத்தில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது, அந்த கட்டத்தை 10 பேர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு கட்டடத்தை அபகரிக்கும் நோக்குடன் மன்சூர் அலிகான் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கட்டடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்ய மன்சூர் அலிகான் முயற்சிப்பதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது, ஆகையால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் மன்சூர் அலிகான சொத்தாட்சிய எச்சரித்துள்ளார். தற்போது மன்சூர் அலிகானுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொத்தாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Arrested: ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.