வலிமை படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தலைமை செயல் அலுவலர் டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு வலிமை படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அனைவரும் படத்தை பார்த்து ரசித்தனர். அங்கு இந்திய சிறப்பு சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள், சிங்க நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
![வலிமை படம் பார்த்த மாற்றுத்திறனாளிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-valimai-malaysia-script-7205221_28022022143447_2802f_1646039087_464.jpg)
மேலும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திரைப்படத்தைப் பார்க்க அஜித் நற்பணி அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் (RM 5000) ரொக்கம், இலவச வழங்கப்பட்டது.
![வலிமை படம் பார்த்த மலேசிய அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-valimai-malaysia-script-7205221_28022022143447_2802f_1646039087_696.jpg)
இதையும் படிங்க: "25 Years of U1" -யுவன் ராஜா அரிய புகைபடத் தொகுப்பு