ETV Bharat / sitara

தமிழில் ரீமேக்காகும் மலையாள சூப்பர் ஹிட் 'அய்யப்பனும் கோஷியும்'

அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும். அப்படியொரு பரவசத்தை ஏற்படுத்திய அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை அதன் சாரம் கெடாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறினார்.

author img

By

Published : Mar 17, 2020, 11:38 AM IST

Ayyappanum Koshiyum to remake in Tamil
Malayalam super hit Ayyappanum Koshiyum

சென்னை: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் என கூறப்படும் கேரள மண்ணின், சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டுகளைப் பெற்று, நல்ல வசூலையும் குவித்துள்ளது.

மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் தமிழ் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப் படத்தைப் பார்த்து நானும் பிரமித்து போனேன். அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும்.

படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி களம், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும், இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு, மலையாள பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

இதையும் படிங்க: இருளர் பழங்குடியினர் பாடலால் பிரபலமான நஞ்சம்மாள் பாட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.