திருவனந்தபுரம்: மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். 1990ஆம் வெளியான 'இன் ஹரிஹர நகர்' படத்தில், இவர் நடித்த ஜான் ஹோனாய் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அண்மை காலமாக தொலைக்காட்சி தொடரில் நடித்துவந்த இவருக்கு சிறுநீரகம் கோளாறு ஏற்பட்டது.
![நடிகர் ரிசபாவா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13051017-thumbnail-3x2-rizbava-1_1309newsroom_1631544922_679.jpg)
அதன்காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று(செப்.13) உயிரிழந்தார் பிற்பகல் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மலையாள திரை நட்சத்திரங்கள் பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் தற்போது முண்டம்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளை இறுதி மரியாதைகள் நடைபெறவுள்ளன.
இதையும் படிங்க: யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... ரசிகர்கள் வருத்தம்...