'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் இசைவெளிட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் தனது குரலில் பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பாடலுக்கு மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடனமாடியுள்ளார். இவரின் இந்த வீடியோவானது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: "உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!