பூரிஜெகநாத் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியானப்படம் போக்கிரி. இதில் இலியானா டி க்ரூஸ், பிரகாஷ் ராஜ், நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, சயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் பிளாக் பஸ்டரான இந்தப்படம் தொடர்ந்து தமிழில் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'போக்கிரி' என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது.
தமிழிலும் இந்தப்படம் பெரும் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து இந்தி, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான இந்தப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தெலுங்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடிவந்தனர்.
இந்நிலையில், மகேஷ்பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா ஷ்ரோத்கர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், 'போக்கிரி' ஒரு உண்மையான கிளாசிக் படம். மாஸூம் கிளாஸூம் கலந்த சரியான கலவை. மகேஷ் பாபுவின் நடிப்பு பக்கா. என பதிவிட்டார். இவரின் இந்த பதிவு மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.