கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தீபாவளி ரேசில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடியுள்ள படம் 'கைதி'. இந்தப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி டில்லி'யை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று திரையில் களமாடிவருகிறார்.
கார்த்தி மட்டுமல்லாது இந்தப்படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி நரேன், லாரி உரிமையாளர் தீனா, கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் படம் முழுக்க தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி திரையில் கைதட்டல்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
இதனிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கைதியை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'கைதி ஒரு இள வயதுக்கான துடிப்புடன், திரில்லிங் ஆக்ஷன் கதைக்களத்தில் அதகளம் செய்திருக்கிறது. பாடல்கள் ஏதும் இல்லாத தரமான ஸ்கிரிப்ட்... புதிய மாற்றத்தை தந்த 'கைதி'யை வரவேற்கிறேன்..! படக்குழுவுக்கு வாழ்த்துகள்...!' என குறிப்பிட்டிருக்கிறார்.
-
Khaidi... new age filmmaking...thrilling action sequences and stellar performances in a gripping script... no songs!! A welcome change :)
— Mahesh Babu (@urstrulyMahesh) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to the entire team @Karthi_Offl @itsNarain @sathyaDP @SamCSmusic @DreamWarriorpic and @Dir_Lokesh !! 👍👍👍👏👏👏
">Khaidi... new age filmmaking...thrilling action sequences and stellar performances in a gripping script... no songs!! A welcome change :)
— Mahesh Babu (@urstrulyMahesh) November 1, 2019
Congratulations to the entire team @Karthi_Offl @itsNarain @sathyaDP @SamCSmusic @DreamWarriorpic and @Dir_Lokesh !! 👍👍👍👏👏👏Khaidi... new age filmmaking...thrilling action sequences and stellar performances in a gripping script... no songs!! A welcome change :)
— Mahesh Babu (@urstrulyMahesh) November 1, 2019
Congratulations to the entire team @Karthi_Offl @itsNarain @sathyaDP @SamCSmusic @DreamWarriorpic and @Dir_Lokesh !! 👍👍👍👏👏👏
சிரிப்பு போலீஸ் டூ சீரியஸ் போலீஸ் - நடிகர் ஜார்ஜ் மரியம் கலகல பேட்டி