கரோனா வைரஸ் பாதிப்புக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 650க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், ஆதரவற்றோர், அடிதட்டு மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
-
Let's battle the COVID-19 as a nation! I urge everyone to follow the rules put forth by our Government. My deepest gratitude for all your efforts @PMOIndia @TelanganaCMO @KTRTRS @AndhraPradeshCM @ysjagan. 🙏🙏 Humanity will rise and we will win this war! #StayHomeStaySafe pic.twitter.com/csfdtaZPWy
— Mahesh Babu (@urstrulyMahesh) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Let's battle the COVID-19 as a nation! I urge everyone to follow the rules put forth by our Government. My deepest gratitude for all your efforts @PMOIndia @TelanganaCMO @KTRTRS @AndhraPradeshCM @ysjagan. 🙏🙏 Humanity will rise and we will win this war! #StayHomeStaySafe pic.twitter.com/csfdtaZPWy
— Mahesh Babu (@urstrulyMahesh) March 26, 2020Let's battle the COVID-19 as a nation! I urge everyone to follow the rules put forth by our Government. My deepest gratitude for all your efforts @PMOIndia @TelanganaCMO @KTRTRS @AndhraPradeshCM @ysjagan. 🙏🙏 Humanity will rise and we will win this war! #StayHomeStaySafe pic.twitter.com/csfdtaZPWy
— Mahesh Babu (@urstrulyMahesh) March 26, 2020
இந்நிலையில், 'தெலுங்கு பிரின்ஸ்' மகேஷ் பாபு தெலங்கானா, ஆந்திர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தொற்று பிரச்னையை சமாளிக்க நமது அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த போராட்டத்தில் உதவ எனது பங்களிப்பைச் செய்ய முடிவு செய்துள்ளேன். ஆந்திரா, தெலங்கானாவின் முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்யை அளிக்கிறேன்.
யாருக்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அவர்களெல்லாம் முன் வந்து தங்களால் முடிந்த நிதியுதவியைத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு பங்களிப்பும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
ஒரு பொறுப்பான குடிமகனாக விதிகளைப் பின்பற்றி இந்த ஊரடங்குக்கு ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் நாம் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து நம்மைச் சேர்ந்தவர்களைக் காக்க வேண்டும். மனிதம் எழும் நாம் இந்தப் போரில் வெல்வோம். அதுவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். என்று மகேஷ்பாபு பதிவிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவை போலவே தெலங்கானா ஆந்திரா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் ஒரு கோடி ரூபாய், பிரபாஸ் ஒரு கோடி ரூபாய், ராம்சரண் 70 லட்சம் ரூபாய், நிதின் 20 லட்சம் ரூபாய் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர்.