கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தபடியே பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடனும், பொதுமக்களுடனும் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பில் இருந்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சமூக வலைதளம் குறித்து கூறுகையில், ”இந்தச் சோதனைக் காலத்தில் ட்விட்டர் எனது முக்கியப் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது. இதன்மூலம் எனது நண்பர்கள், ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை ட்விட்டர் வாயிலாக உடனே அறிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற நேரத்தில் சமூக வலைதளம் மிகச் சக்திவாய்ந்த ஊடகமாக இருக்கிறது” என்றார்.
ட்விட்டரில் மகேஷ் பாபு மட்டுமல்லாது சிரஞ்சீவி, ராம்சரண், உள்ளிட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் மிக ஆக்ட்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.