ETV Bharat / sitara

மகான் அப்டேட் - தாதாவான துருவ் விக்ரம் - vikram movies

’மகான்’ படத்தில் துருவ் விக்ரம் லுக்கின் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தாதா
தாதா
author img

By

Published : Sep 10, 2021, 11:07 AM IST

Updated : Sep 10, 2021, 11:20 AM IST

சியான் விக்ரமின் 60ஆவது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவருகிறார். இதில் முதல்முறையாக அவர் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துவருகிறார்.

7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகிவருகிறது. இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விக்ரமின் லுக் அண்மையில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ’மகான்’ படத்தில் துருவ் விக்ரமின் லுக் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தாதா என்ற பெயரில் நடித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக வெளியாகியிருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

'ஆதித்ய வர்மா' படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Last Updated : Sep 10, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.