எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கும் புதிய படம் 'மஹா'. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஹன்சிகா நடித்துவருகிறார்.
திரில்லர் பாணியல் தயாராகிவரும் இப்படம் ஹன்சிகாவின் 50ஆவது படமாகும். இப்படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரானுக்கு இது 25ஆவது படமாகும்.
மஹா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் (ஆக.09) தனது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதில் மேலாடையின்றி இரு கைகளிலும் ரத்தக்கறையுடன் ஹன்சிகா தோன்றியுள்ளார்,.
