ETV Bharat / sitara

சாந்தகுமாரின் எட்டு ஆண்டு கால தவம் 'மகாமுனி' - மஹிமா

'மகாமுனி' ஒரு டீம் ஒர்க் இங்கு அனைத்து தொழில் நுட்ப கலைஞருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Magamuni
author img

By

Published : Aug 31, 2019, 10:17 PM IST

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி. இப்படத்தில் நடிகர் ஆர்யா, நடிகைகள் மஹிமா, இந்துஜா நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. இதில் நடிகர் ஆர்யா, நடிகைகள் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா பாடலாசிரியர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு!

அப்போது சாந்தகுமார் பேசுகையில், 'இந்தப் படம் எடுக்க மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். இதற்குக் காரணம் திரைப்பட வாழ்க்கையும் பர்சனல் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டதுதான்.

எனக்கு இவ்வளவு காலம் தந்த ஞானவேல்ராஜாவுக்கு நன்றி. அவர் எப்பொழுது எனக்கு தொலைபேசி செய்து படத்தின் கதை குறித்து கேட்டாலும், நான் இன்னும் 6 மாதம் அவகாசம் வேண்டும். ஒரு வருடம் வேண்டும் என்று கேட்பேன். அவர் எதுவுமே சொல்ல மாட்டார்.

அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஆனால், இப்போது படத்தில் அனைத்து வேலைகளும் முடித்து பார்க்கும்போது எட்டு ஆண்டிற்கான பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

தொடர்ந்து நடிகர் ஆர்யா பேசுகையில்,’நல்ல கதை. இது போன்ற படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இயக்குநர் எப்பவுமே சொல்லுவார் அதிகமாக வசனங்கள் தேவை இல்லை. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தமன் உள்ளார். அவருக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும். பேக்கிரவுண்ட் மியூசிக் பற்றி யோசிச்சு அதற்கு ஏற்றார்போல் படப்பிடிப்பு நடைபெறும்.

அதே போல் படத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து அவர்களுடைய திறமைகளை பயன்படுத்த செய்தார்.

இது ஒரு டீம் ஒர்க் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும். ரொம்ப நாட்களுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையக் கூடிய ஒரு படத்தில் நடித்திருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

Intro:மகாமுனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புBody:ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மௌனகுரு புகழ் இயக்குனர் சாந்தகுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி.
ஆர்யா மஹிமா இந்துஜா நடித்துள்ள இந்த படத்தின் பதிரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடை பெற்றது. இதில் ஆர்யா மஹிமா நம்பியார் இந்துஜா பாடலாசிரியர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில்,

மௌனகுரு படம் வெளிவந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் படம் மகாமுனி. மௌனகுரு வந்தபிறகு அந்த படம் பார்த்து இவரில் இவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன் இப்படி வாழ்த்து கூறுவது ஒரு சில இயக்குனர்களை மட்டும்தான் அந்த பட்டியலில் சாந்தகுமார் 2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப்படத்தை மூன்றாவது வாரத்தில் தான் பார்த்தேன். அதில்ஒரு விபத்து காட்சி இடம் பெறும்.அதைக் கண்டு நான் பெரிதும் வியந்தேன்.
அவருடன் வேலை செய்ய விருப்ப்ப்பட்டு இருவரும்இணைந்தோம்.

இந்தக் கதையை எழுதுவதற்குஅவருக்கு எட்டு வருடங்கள் ஆனாலும். மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் இந்தப் படத்திற்காக வேலை செய்யத்துவங்கியபோது அவருடையமகன் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். இப்போதுபன்னிரெண்டாம் வகுப்புபடிக்கிறார்.
மேலும்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை என அமுல்படுத்திய தவறான முடிவுகள் சில தினங்களில் மாற்றப்படும் விரைவில் பத்திரிக்கையாளர் குறைகள் தீர்க்கப்படும் என்றார்.

இயக்குனர் சாந்தகுமார் பேசுகையில்,

இந்தப் படம் எடுக்க மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன் இதற்கு காரணம் திரைப்பட வாழ்க்கையும் பர்சனல் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று கலந்து விட்டதுதான் காரணம் எனக்கு இவ்வளவு காலம் தந்த இயக்குனர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி அவர் எப்பொழுது எனக்கு தொலைபேசி செய்து படத்தின் கதை குறித்து கேட்டாலும் நான் இன்னும் 6 மாதம் அவகாசம் வேண்டும் ஒரு வருடம் வேண்டும் என்று கேட்பேன் அவர் எதுவுமே சொல்லாமல் இருப்பார் அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருக்கும் ஆனால் இப்பொழுது படத்தில் அனைத்து வேலைகளும் முடித்து பார்க்கும் பொழுது எட்டு ஆண்டிற்கான பலன் கிடைத்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்

நடிகர் ஆர்யா பேசுகையில்,

ஒரு வருடத்திற்கு பின் படம் தொடர்பாக சந்திப்பதில் உங்களை சந்திக்கிறேன். நல்ல கதை இது போன்ற படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என்றார். இயக்குனர் எப்பவுமே சொல்லுவார் அதிகமாக வசனங்கள் தேவை இல்லை இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் உள்ளார் அவருக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் எப்பொழுதும் பேக்ரவுண்ட் மியூசிக் பற்றி யோசிச்சு அதற்கு ஏற்றார்போல் படப்பிடிப்பு நடைபெறும் இதுபோன்று தான் படத்தில் உள்ள ஒவ்வொரு டெக்னீஷியன் க்கும் வாய்ப்புகளை கொடுத்து அவர்களுடைய திறமைகளை பயன்படுத்த செய்தார் இது ஒரு டீம் ஒர்க் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையக் கூடிய ஒரு படத்தில் நடித்திருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு உள்ளது.

Conclusion:மேலும், இயக்குனர் இடைவெளி அதிகம் எடுக்காமல் தொடர்ந்து படம் எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.