ETV Bharat / sitara

Exclusive: ரஜினி எங்களது குடும்பத்தில் ஒருவர்... எல்லாமுமானவர் - ரசிகர் முத்துமணியின் மனைவி

author img

By

Published : Mar 11, 2022, 11:10 PM IST

'நடிகர் ரஜினிகாந்த் எங்களது குடும்பத்தில் ஒருவர். தலைவர், ரசிகர் என்பதைத் தாண்டி, சகோதரர், தகப்பனார் என எல்லாவற்றுக்கும் சமமானவர்' என்று நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை முத்துமணியின் மனைவி லட்சுமி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Madurai Rajini Fan Muthumani Wife Lakshmi

மதுரை: நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக மதுரையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த பெருமைக்குரியவர் ஏ.பி.முத்துமணி.

ரஜினியின் தீவிர ரசிகர் மட்டுமன்றி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் ரசிகர் மன்றம் உருவாகக் காரணமாக இருந்தவர். இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி மாலை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு

இந்நிலையில், இன்று (மார்ச் 11) மாலை தனது ரசிகர் முத்துமணியின், மனைவி லட்சுமியிடம் தொலைபேசி வாயிலாக பேசி நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், முத்துமணியின் மகளுடைய கல்விக்கும், திருமணத்திற்கும் உதவுவதாகத் தெரிவித்ததுடன், கடந்த ஐந்து நாள்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தன்னால் தொடர்பு கொள்ள முடியாத வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

மனம்விட்டு உரையாடிய 'தலைவர்'

இந்நிலையில், முத்துமணியின் மனைவி லட்சுமி, ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசியபோது, "என்னுடைய கணவர் முத்துமணி ரஜினி மன்ற முதல் ரசிகராவார். கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். அச்சமயம் ரஜினி ரசிகர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இறுதி அஞ்சலியை மிகப்பெரிய ஊர்வலமாக நடத்தினர். தற்போது எங்களது குடும்பம் மிகுந்த இழப்பைச் சந்தித்துள்ளது.

கடந்த நான்கு நாள்களாக கடும் மனவருத்தத்தில் இருந்தேன். இன்று மாலை 6.30 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தார்.

ரஜினி ரசிகர் முத்துமணியின் மனைவி லட்சுமி பேட்டி

'உங்களது பெண்ணைப் பற்றி எந்தவித கவலையும் வேண்டாம். அவரும் என்னுடைய பெண்தான். அவரது எதிர்காலத்தை குறித்து யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதோடு, எல்லா காரியங்களும் முடிந்தபிறகு நீங்கள் இருவரும் சென்னைக்கு வாருங்கள்' என்றும் கூறினார்.

குடும்பத்தில் ஒருவர்

தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தது எனக்கு ஆறுதலாக உள்ளது. என்னுடைய கணவர் இதற்கு முன் இரண்டு முறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், என்னைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். எந்த ஒரு விசயமாக நாங்கள் அவரது செல்பேசியில் எப்போது தொடர்பு கொண்டாலும் பேசத் தவறியதே இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் எங்களது குடும்பத்தில் ஒருவர். தலைவர், ரசிகர் என்பதைத் தாண்டி, சகோதரர், தகப்பனார் என எல்லாவற்றுக்கும் சமமானவர்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இதையும் படிங்க: 'கவலைப்பட வேண்டாம், நான் இருக்கிறேன்' - ரசிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.