சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான மதுமிதா, அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, ”தற்போது நாம் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இந்தத் தொற்று பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். கையை கழுவாமல் வாய், மூக்கு ஆகியவற்றை கைகளால் தொடக் கூடாது.
-
My opinion about 144 in Tamilnadu #TamilNadulockdown #CoronavirusLockdown#Corona@johnmediamanagr pic.twitter.com/6FJ7Xy9Kuo
— Actor Madhumitha (@ActorMadhumitha) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My opinion about 144 in Tamilnadu #TamilNadulockdown #CoronavirusLockdown#Corona@johnmediamanagr pic.twitter.com/6FJ7Xy9Kuo
— Actor Madhumitha (@ActorMadhumitha) March 24, 2020My opinion about 144 in Tamilnadu #TamilNadulockdown #CoronavirusLockdown#Corona@johnmediamanagr pic.twitter.com/6FJ7Xy9Kuo
— Actor Madhumitha (@ActorMadhumitha) March 24, 2020
144 தடை உத்தரவை விளையாட்டுக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு சிலர் தடை உத்தரவின்போது நமது நகரம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன் வருவார்கள். தயவுசெய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். நீங்கள் எடுக்கும் ரிஸ்க் மூலமாக நம்முடைய குடும்பம், குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இந்த தொற்று வந்தால் எத்தனை பேருக்கு பரப்ப முடியும் என்பதை நாம் தினம் தினம் செய்திகளில் பார்த்து வருகிறோம். எனவே அனைவரும் வீட்டில் இருங்கள், அன்பான குடும்பத்துடன் செலவிடுங்கள்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியாவை நினைத்தால் பயமாக உள்ளது'