சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பொலிட்டிக்கல் திரில்லரான ‘மாநாடு’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிவரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர். யுவன் இதற்கு இசையமைத்து வருகிறார், ஜூன் 21ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் உதயா சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு டப்பிங்கில் இருக்கிறேன். காட்சிகள் வேற லெவலில் இருக்கிறது. படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. சிம்பு ராக்கிங், எஸ்ஜே சூர்யா வாவ் என குறிப்பிட்டு. வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிம்பு ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் ஆயுத பூஜை நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.