'கோலமாவு கோகிலா' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாகப் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இவர்களுடன் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் வரும் சனிக்கிழமை (அக்.9) திரையரங்குகளில் வெளியாகிறது.
![மாநாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-manadu-doctor-script-7205221_07102021140208_0710f_1633595528_711.jpg)
இந்நிலையில் திரையரங்குகளில் டாக்டர் படத்தின் இடைவேளையின் போது, மாநாடு ட்ரெய்லர் ஒளிபரப்பவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சஞ்சனா மீது பாய்ந்த மற்றொரு வழக்கு