ETV Bharat / sitara

வந்தான், சுட்டான், போனான், ரிபீட்- வெளியான மாநாடு ட்ரெய்லர் - maanaadu trailer

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

maanaadu-trailer-released-today
வந்தான், சுட்டான், போனான், ரிபீர்ட்- வெளியான மாநாடு டிரைலர்
author img

By

Published : Oct 2, 2021, 1:12 PM IST

Updated : Oct 2, 2021, 2:56 PM IST

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் மாநாடு படத்தின் ட்ரெய்லர் இன்று(அக். 2) வெளியிடப்பட்டது. சிலம்பரசனின் ரசிகர்கள் இந்தப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர் என்றே கூறலாம்.

2.09 நிமிடம் ஓடும் ட்ரெய்லர் 'யுவர் டைம் ஸ்டார்ட் அகைன்' என சிம்பு பேசுவதுடன் தொடங்குகிறது. 'வந்தான், சுட்டான் போனான், ரிபீட்டு' என வசனம் பேசும் எஸ்.ஜே. சூர்யா இந்தப்படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என யூகிக்கமுடிகிறது.

இந்த ட்ரெய்லரை பார்க்கையில், ஹாலிவுட் படமான பைட் கிளப், டெனன்ட் ஆகிய படங்கள் நினைவில் வந்து போவதற்குள், படத்தில் நடித்துள்ள ஓய்.ஜி. மகேந்திரன் வாயால், 'என்னய்யா டெனன்ட் படம் மாதிரி குழப்புற' என வசனம் பேசவைத்திருக்கிறார் இயக்குநர்.

முதலமைச்சரை அரசியல் மாநாட்டில் கொலை செய்வதற்கு முயற்சி நடக்கிறது. கொலை செய்பவர் யார், கொலையை தடுக்க முயற்சிப்பவர் யார் என கதை நகர்வது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. யுவனின் இசை, பிரவீனின் படத்தொகுப்பு எல்லாம் அட்டகாசம்.

தீபாவளிக்கு திரையரங்குகளில் களமிறங்கவுள்ள மாநாடு சிலம்பரசனின் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், அண்ணாத்தா படத்துடன் போட்டி போடுவதால், சிலம்பரசனின் ரசிகர்களைத் தாண்டி மற்றவர்களை மாநாடு திரைப்படம் கவருமா, மக்களை இழுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ட்ரெய்லர் இறுதியில் சிம்பு காட்டும் குறியீடு யாருக்கானது என்பது படத்தின் இயக்குநருக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க: நடிகை வைஷாலிக்கு திடீர் திருமணம்?

Last Updated : Oct 2, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.