வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' (Maanaadu release) படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி எனப் பலர் நடித்துள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு
மாநாடு படம் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகயிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனது. இறுதியாக இப்படம் இன்று (நவம்பர் 25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவை திரையில் தோன்றுவதால், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு படம் இன்று (நவ.25) வெளியாகாது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதனால், படத்தை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் ஒரு சில மணி நேரங்களில் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவும், படம் சொன்னபடி இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.
கேடிஎம் பிரச்சினை
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று (நவம்பர் 25) காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடன் வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகளில் கேடிஎம் பிரச்சினை காரணமாகச் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது.
அந்த காலத்தில் படத்தை ரீல் மூலம் ரிலீஸ் செய்தனர். ஆனால் தற்போது டிஜிட்டல் முறை என்பதால் projector-யில் படத்தைத் திரையிட கேடிஎம் (Key Delivery Message) என்னும் கடவுச்சொல் தேவை.
கேடிஎம் கிடைக்க தாமதமாகவே சிறப்புக் காட்சி ரத்தாக்கியுள்ளது. சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டதால் அதிகாலை முதல் திரையரங்கு வாசலில் காத்திருந்த ரசிகர்கள் மீண்டுமொரு முறை ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Maanaadu Release: தடைகள் தகர்ந்தது ; திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'மாநாடு'