ETV Bharat / sitara

சிறிய பட்ஜெட் படங்களா!- லோக்கல் சேனலுக்கு விற்பனை செய்ய திட்டம் - tamil cinema

சென்னை: சிறிய பட்ஜெட்டில் தயாரான தமிழ் திரைப்படங்களை லோக்கல் சேனல்களுக்கு விற்பனை செய்ய சிறுபடத் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

லோக்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம்
author img

By

Published : Apr 21, 2019, 9:40 PM IST

சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அந்தப்படத்தை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலும் பாதிக்கப்படுகிறது. இதையும் மீறி வெளியிட நினைத்தாலும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கலாக இருக்கிறது.

வியாபாரம் பெருத்துவிட்டதால் திரைத்துறையில் இதுபோன்ற சிக்கல் நீடித்துவருகிறது. எனவே, சிறுபட தயாரிப்பாளர்களை காக்கும் வகையில் இதுவரை வெளியிடப்படாத சிறிய பட்ஜெட் படங்களை தமிழ்நாட்டில் உள்ள லோக்கல் சேனல்களில் வியாபார ரீதியாக வெளியிடும் முயற்சியாக 'சிறுபடத் தயாரிப்பாளர்களும்', 'லோக்கல் சேனல் உரிமையாளர்கள்' சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வடபழனியில் உள்ள ஜே.பி.டவரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறுபடத் தயாரிப்பாளர்களும், லோக்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்விஷன் தலைவரும் கலந்துகொண்டனர். இந்த வியாபார சந்திப்பில், சிறுபட தயாரிப்பாளர் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில், தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் கில்ட் தலைவர் ஜாகுவார் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அப்போது பேசிய ஜாகுவார் தங்கம், 'லோக்கல் சேனல்கள் அதிகபட்ச படங்களை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர். எனவே அனைத்து தயாரிப்பாளர்களும் இணைந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு வியாபார ரீதியில் வெற்றிபெற வேண்டும்' எனக் கூறினார்.

local channel association
க்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம்

மேலும், இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், 'ஏராளமான படங்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை முறைப்படுத்தி லோக்கல் சேனல்களிடம் விவரங்கள் கொடுத்து விலைபேசி நேரடியாக வியாபாரம் செய்ய சில நாட்களுக்குள் ஏற்பாடு செய்வோம்.

சினிமா வியாபாரத்திற்கான முதல் செங்கலை எடுத்து வைத்திருக்கிறோம். அனைவரும் சேர்ந்து விரைவில் மாளிகை கட்டுவோம். நாம் நேர்மையாக முயன்றால் எல்லாமே சாத்தியப்படும்; முடியாதது எதுவும் இல்லை' என்றார்.

சிறிய பட்ஜெட் படங்களை லோக்கல் சேனலுக்கு விற்பனை செய்யும் புதிய திட்டம்.

சிறிய பட்ஜெட்டில் தயாரான ஏராளமான தமிழ் திரைப்படங்களை வெளியிடப்படாமல் உள்ளான். திரையரங்கு கிடைப்பதில்லை போன்ற சிக்கலால் தற்போது திரை துறையில் நீடித்துவரும் நிலையில், சிறுபட தயாரிப்பாளர்களை காக்கும் வகையில் இதுவரை வெளியிடப்படாத சிறிய பட்ஜெட் படங்களை தமிழகத்தில் உள்ள லோக்கல் சேனல்களில் வியாபாரரீதியாக வெளியிடும் முயற்சிகாண  'சிறுபடத் தயாரிப்பாளர்களும்', 'லோக்கல் சேனல் உரிமையாளர்கள்' சந்திப்பு  நடைபெற்றது.

வடபழனியிலிருக்கும் ஜே.பி.டவரில் 'சிறுபடத் தயாரிப்பாளர்களும்', 'லோக்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்விஷன்' தலைவரும் கலந்துகொண்ட இந்த வியாபார சந்திப்பில், சிறுப்படை தயாரிப்பாளர்  சுமார்  70 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் கில்ட் தலைவர் ஜாகுவார் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். லோக்கல் சேனல்கள் அதிகபட்ச படங்களை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதாகவும்  அனைத்து  தயாரிப்பாளர்களும் இணைந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு வியாபார ரீதியில் வெற்றிபெற வேண்டும் என்று திரு.ஜாகுவார் தங்கம் கூறினார்.

இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ஏராளமான படங்கள் பற்றிய விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை முறைப்படுத்தி லோக்கல் சேனல்களிடம் விபரங்கள் கொடுத்து விலைபேசி நேரடியாக வியாபாரம் செய்ய சில நாட்களுக்குள் ஏற்பாடு செய்வோம். 
சினிமா வியாபாரத்திற்கான முதல் செங்கலை எடுத்து வைத்திருக்கிறோம். அனைவரும் சேர்ந்து விரைவில் மாளிகை கட்டுவோம். நாம் நேர்மையாக முயன்றால் எல்லாமே சாத்தியம் என்றார் 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.