ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'லக்ஷ்மி பாம்'

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள 'லக்ஷ்மி பாம்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jun 30, 2020, 8:14 AM IST

Laxmmi Bomb will have straight ott release

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி எனப் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் 'லக்ஷ்மி பாம்'. தமிழில் வெளியாகி ஹிட் அடித்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக்கான இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களுக்கும் அரசு தடைவிதித்திருந்தது.

'லக்ஷ்மி பாம்'

நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இதன் காரணமாக மூடப்பட்டன. இதன் காரணமாக வெளியீட்டுக்குத் தயாராக இருந்த ஒரு சில படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிடி தளத்தில் வெளியாகின.

இதையடுத்து 'லக்ஷ்மி பாம்' திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டாரில் 'லக்ஷ்மி பாம்' வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் மக்களுக்கு திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதில்லை என்றும், வீட்டில் அமர்ந்து படம் பார்ப்பதால் கவன சிதறல்கள் அதிகமாக உள்ளதால் படத்தை ரசிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹாரர் படமான 'லக்ஷ்மி பாம்' திரைப்படத்தை ஓடிடியில் பார்க்கும்போது அதன் பிரமாண்டத்தையும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நுணுக்கங்களையும் உணர்ந்து மக்கள் இந்தப் படத்தை ரசிப்பார்களா என்ற தயக்கமும் உள்ளது.

பாலிவுட்டில் தனது இயக்கத்தில் உருவான 'லக்ஷ்மி பாம்' திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாவதில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறிது வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க... OTTயில் ரூ. 120 கோடிக்கு விற்பனையான 'லக்ஷ்மி பாம்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.