ETV Bharat / sitara

இந்த நாள் மட்டும் என் வாழ்க்கையில வரலைனா? - சித்ராவின் கால்ஸ் பட ட்ரெய்லர் வெளியீடு - late actress chitra debut movie trailer released

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் முதல் படமான 'கால்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

late actress chitra debut movie trailer released

author img

By

Published : Jan 29, 2021, 8:31 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் அனைவராலும் முல்லையாக கொண்டாடப்பட்ட சித்ரா, எதிர்பாராதவிதமாக கடந்த டிசம்பர் மாதம் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. சித்ராவின் இந்தத் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னதாக கால்ஸ் என்ற திரைப்படத்தில் சித்ரா நடித்துவந்தார். சபரீஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் அழைப்புதவி மையப் (கால்சென்டர்) பணியில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் சித்ராவின் நிஜ வாழ்க்கையில் பொருந்துவது போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இந்த நாள் மட்டும் என் வாழ்க்கையில் வரலைன்னா நானும் இந்த உலகத்துல ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திருப்பேனோ என்னவோ, அந்தப் பிரபஞ்சத்துக்குத்தான் வெளிச்சம்", "இது நேச்சுரல் டெத் இல்ல கண்டிப்பா மர்டர்தான்" என்பது போன்ற வசனங்கள் சித்ராவின் மரணத்தை நம் கண்முன் காட்டுவதாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் பதிவிட்டுவருகிறார்கள்.

இதையும் படிங்க... கணவர் இறப்பில் சந்தேகம்: முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்ட மனைவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.