'எட்டு தோட்டாக்கள்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'குருதி ஆட்டம்'. இதில் அதர்வா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில், டி. முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகவிருந்த இப்படம் திடீரென இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் 'குருதி ஆட்டம்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகியுள்ளது. அதாவது இப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு அதர்வாவிற்கு இப்படம் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாநாடு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியீடு