நடிகர் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘குருதி ஆட்டம்’. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ‘எட்டு தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறுகையில், “ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்டுடன் எனது இத்திரைப்பயணம், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ’குருதி ஆட்டம்’ திரைக்கதை மீதும், என் மீதும் தயாரிப்பாளர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்கமாட்டேன்.
’எட்டு தோட்டாக்கள்’ திரைப்படம் பார்த்த பிறகுதான் எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் கொடுத்தார். ஒரு தயாரிப்பாளராக எந்த விதத்திலும் தலையிடாமல் பணியாற்ற சுதந்திரம் கொடுத்தார்.
படத்தை மேலும் மேலும் கவனமுடன் உருவாக்க இதுவே காரணம். இந்த படத்தின் நாயகன் அதர்வா சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். ஒரு சகோதரர் போலதான் என்னிடம் நடந்துகொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, ட்ரெய்லர், பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!