ETV Bharat / sitara

ஏர் இந்தியா நிறுவனம் மீது கிரிதி கர்பந்தா காட்டம்; காரணம் என்ன? - கிரிதி கர்பந்தா

பாலிவுட் நடிகை கிரிதி கர்பந்தா ஏர் இந்தியா விமான நிறுவனம் குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தாக்கிய கிரிதி கர்பந்தா

author img

By

Published : Feb 22, 2020, 7:20 PM IST

பாலிவுட் நடிகை கிரிதி கர்பந்தா படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அவ்வப்போது சமுகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது, அவர் உடமைகளை தொலைத்துவிட்டதாகக் கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘உங்கள் விமானத்தில் வந்து, எனது உடமைகளை மிஸ் செய்துவிட்டேன். மேலும் உங்கள் ஊழியர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அடிப்படை விஷயங்கள் குறித்து சொல்லிக்கொடுங்கள்' என்று பதிவிட்டார். இதற்கு மன்னிப்பு தெரிவித்த அந்நிறுவனம், 'தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உடமைகளின் விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டனர்.

  • Dear @airindiain , thank u for losing my luggage, yet again. And maybe u need to teach your staff a thing or two about basic manners.

    — kriti kharbanda (@kriti_official) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பதிலளித்த கிரிதி, 'உங்கள் மன்னிப்பை ஏற்க நான் விரும்புகிறேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனது உடமைகள் எண் குறித்த விவரம் எதுவும் என்னிடம் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், கிரிதியின் உடைமைகள் கிடைக்கப்பெற்றதாகவும், விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • I would love to accept your apologies, but unfortunately there’s still no sign of my luggage. Also, your teams at the Mumbai or Goa airport, haven’t had the decency to even get back to me and share the whereabouts of my luggage.

முன்னதாக இதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு, இதே விமானத்தில் கிரிதி பயணித்தபோது அவரது உடமைகள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலுடன் கைகோத்த தயாரிப்பாளர் தாணு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.