லேடி டயானா ஸ்பென்சர் என்று அழைக்கப்படும் மறைந்த இளவரசி டயானாவாக ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடிக்கவுள்ளாராம். இவர் ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான அட்வென்சர்லேண்ட், தி ட்விலைட் சீரிஸ் படங்களில் நடித்துள்ளார்.
ஸ்பென்சர் என்ற பெயரில் டயானாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படம் டயானா - சார்லஸ் ஆகியோரின் திருமண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகவுள்ளது.
படத்துக்கு பிரபல திரைக்கதை ஆசிரியர் ஸ்டீவ் நைட் திரைக்கதை எழுதுகிறார். படத்தை பப்லோ லரெயின் இயக்குகிறார். வரும் 2021ஆம் ஆண்டு படத்தின் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் புகழ் பெற்ற இளவரசி டயானா, பிரிட்டன் நாட்டு இளவரசர் சார்லஸை 1981ஆம் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு 1997ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.