நடிகர் ஜாக்கி ஷெராபின் மகள் கிருஷ்ணா ஷெராப், ஏபன் ஹைம்ஸ் என்பவரை காதலித்துவருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை கிருஷ்ணா ஷெராப் கடந்த ஆண்டு இறுதியில் உறுதி செய்தார். அதன்பிறகு தன் காதலருடன் வெளியே செல்லும் புகைப்படங்களை தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிருஷ்ணா ஷெராப் வெளியிட்டுவருகிறார்.
சமீபத்தில் கிருஷ்ணா ஷெராப் தனது காதலருடன் துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி பாம் என்ற இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளும்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை, கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக, ஏபன் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணாவை ’தன் மனைவி’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் கிசுகிசுப்படுகிறது. இந்த வதந்திக்கு இருவரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: 'கோப்ரா' ஃபர்ஸ்ட் லுக்: ஆனால் 7 வித்தியாச கெட்டப்பில் விக்ரம்