நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்த திரைப்படம், ‘கூழாங்கல்’. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இத்திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கவனம் பெற்றது. பின்னர் இப்படத்தைப் பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதை மெருகேற்றுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் 'கூழாங்கல்' திரைப்படம், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருது வென்றுள்ளது. இதன்மூலம் தமிழில் ரோட்டர்டம் விருது வென்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்களுக்குக் கிடைத்திருக்கும் முதல் சர்வதேச விருது" எனக் குறிப்பிட்டு, படத்திற்குக் கிடைத்த டைகர் விருதுடன் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகைகளில் அதிக பாலோயர்களை கொண்ட ராஷ்மிகா