ETV Bharat / sitara

வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்: இந்த வாரம் எத்தனை படம் வெளியாகிறது - திரையரங்குகள்

4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரிசையாக பல படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

திரையரங்கு
திரையரங்கு
author img

By

Published : Sep 7, 2021, 10:59 AM IST

Updated : Sep 7, 2021, 11:12 AM IST

தமிழ்நாட்டில் கரோனா அச்சம் காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த மாதம் இறுதியில் திறக்கப்பட்டன. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க அரசு அனுமதி கொடுத்தது.

இதனால் நீண்ட நாள்களாக வெளியாகாமல் காத்திருந்த, பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசையாக வெளியாகிறது. ஒரு சில படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அந்தவகையில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்களில் பட்டியல்

லாபம்:

லாபம்
லாபம்

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'லாபம்'. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படத்தை இயக்கிக்கொண்டு இருந்த போதே, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழக்க அவரது உதவி இயக்குநர்கள் மீதமுள்ள படத்தை இயக்கினர். லாபம் திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தலைவி

தலைவி
தலைவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'தலைவி'. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடைசி விவசாயி

கடைசி விவசாயி
கடைசி விவசாயி

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், கடைசி விவசாயி. 85 வயது விவசாயி முன்னணி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

துக்ளக் தர்பார்:

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்துள்ள படம், 'துக்ளக் தர்பார்'. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கிய இப்படத்தில் கருணாகரன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்காததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது இப்படம் நேரடியாக வரும் 10ஆம் தேதி பிரபல தொலைக்காட்சியில் வெளியாகி, அதேநாளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது.

டிக்கிலோனா

டிக்கிலோனா
டிக்கிலோனா

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள படம், டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் தயாராகியுள்ளது.

கார்த்திக் யோகி இயக்கிய இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார். மூன்று வேடங்களில் சந்தானம் நடித்திருக்கும் இப்படத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டிக்கிலோனா திரைப்படம் வரும் 10ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

Last Updated : Sep 7, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.