ETV Bharat / sitara

புரோட்டா சூரி முதல் 'விடுதலை' வரை... சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்

நடிகர் சூரி இன்று (ஆகஸ்ட் 27) தனது 44ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் #HBD சூரி என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகிவருகிறது.

பரோட்டா சூரி
பரோட்டா சூரி
author img

By

Published : Aug 27, 2021, 7:55 AM IST

நடிகராகும் கனவோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம். அவர்களில் எத்தனை பேர் தமிழ் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறியே? அந்த வரிசையில் எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிப் படிப்பைக் கைவிட்டுவிட்டு சென்னைக்கு ஓடிவந்தவர் சூரி.

'மறுமலர்ச்சி' படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார். இதனையடுத்து ஏகப்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், விஷ்ணு விஷால் நடித்த, 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

புரோட்டா சூரி பெயர் எப்படி வந்தது?

அந்தப் படம் அவரது கரியரில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில், உணவகம் ஒன்றில் 50 புரோட்டா சாப்பிட்டால், 100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சாப்பிட்ட புரோட்டாவுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை எனவும் போட்டி வைக்கப்பட்டிருக்கும். அப்போது, கடையில் பணியாற்றுபவர் விடுத்த சவால் நிறைந்த போட்டியில் பங்கேற்ற சூரி 50 புரோட்டா சாப்பிட்டு முடிப்பார்.

ஆனால் கடை ஊழியர் சூரியை ஏமாற்ற முயற்சி செய்வார். அப்போது சூரி, ”இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க... நான் மொதல்ல இருந்து சாப்பிடுறேன்” என்று சொல்லுவார். இவரது இந்தக் காமெடி சூரியை திரையுலகிற்குப் புடமிட்டுக் காட்டியது. இதையடுத்து சூரியின் வளர்ச்சி படுவேகமாக வளர்ந்தது.

பரோட்டா சூரி
புரோட்டா சூரி

அதிலிருந்துதான் அவரது பெயர், 'புரோட்டா சூரி' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

கிராமப் பின்னணி கதைகளில்

இதனையடுத்து சூரி கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக சூரியை நடிக்கவைக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டிப் போட்டனர். இவரது பேச்சில் இயல்பாகவே மதுரை வாசம் வீசுவதால் கிராம பின்னணி உள்ள கதைகளில் எளிதாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

பிரிக்க முடியாத அண்ணன் - தம்பி

இவரும், நடிகர் சிவகார்த்திகேயனும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் ஒன்றாக நடித்தனர். நடித்த முதல் படத்திலேயே ஹீரோவுக்கும்- நகைச்சுவை நடிகருக்கும் நட்பு தோன்றியது. அதனால் தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர்.

அண்ணன் - தம்பி
அண்ணன் - தம்பி

அண்ணன் - தம்பி எனப் பாசமாகப் படத்தில் மட்டுமில்லாமல் வெளிப்புறத்திலும் இவர்கள் பேசிக்கொள்வது மக்கள் மனத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சூரி வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் அங்கே முதல் ஆளாக என்ட்டிரி கொடுத்துவிடுவார்.

அண்ணன் - தம்பி
அண்ணன் - தம்பி

மதுரையில் அம்மன் சைவ உணவகம், அய்யன் அசைவ உணவகத்தை சிவகார்த்திகேயன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நாயகனாகக் கலக்கல்

நகைச்சுவை நடிகராக வலம்வந்த சூரி, தற்போது ஹீரோவாக நடித்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. இந்தப் படத்திற்காகத் தனது உடல் அமைப்பை மாற்றி நடித்துவருகிறார். பொதுவாக நகைச்சுவை நடிகர் பலரும், ஹீரோக்களாக நடிக்கும் நிலையில், சூரியும் அதே பாணியைக் கையில் எடுத்திருக்கிறார்.

சூரி
சூரி

ஆங்கிலச் சொல் உச்சரிப்பை தனது பாணியில் பேசி ஒரு நகைச்சுவைக் கலைஞராக, இவர் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைப்பதில் வல்லவர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.