ETV Bharat / sitara

தீபிகாவை வம்பிழுக்கும் சுஷாந்த் சிங் ரசிகர்கள்! - சுஷாந்த் சிங் மரணம்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள், ட்விட்டரில் தீபிகா படுகோனை வம்பிழுக்கும்படியான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தீபிகா
தீபிகா
author img

By

Published : Aug 13, 2020, 7:32 PM IST

நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் குறித்து மும்பை காவல் துறையினரும், பீகார் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திரையுலகப் பிரபலங்கள் பலரும் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்குப் பின்னர் மன அழுத்தம் குறித்த தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனும் “மன அழுத்தத்திற்கு, தற்கொலை தீர்வாகாது” என்று சுஷாந்த் உயிரிழந்த போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் "சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். உண்மை தெரியாமல் எதையும் பகிராதீர்கள்" என்று பதிலடி தந்தனர்.

தற்போது சுஷாந்தின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக சுஷாந்த் ரசிகர்கள் நீதி கோரி ட்விட்டரில் #SCForSSR என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோனை டேக் செய்து மீண்டும் சுஷாந்த் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதன்படி நெட்டிசன் ஒருவர், "உங்களால் சுஷாந்த் மரண வழக்கில் உறுதுணையாக நிற்க முடியவில்லை என்றால் அமைதியாக இருங்கள். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மன அழுத்தம் குறித்து நீங்கள் அன்று வெளியிட்ட செய்தியைப் பார்த்த பிறகு உங்களது செயல் எனக்குப் பிடிக்கவில்லை. சரியான காரணம் தெரியாமல் இது போன்ற தகவல்களை இனிமேலாவது பகிராமல் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.