ETV Bharat / sitara

'சாண்டியின் செம போதை பாடல் பிடிக்கும்' - கிருத்திகா உதயநிதி!

author img

By

Published : Feb 23, 2022, 6:48 PM IST

சாண்டியின் செம போதை பாடல் பிடிக்கும் என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

விழா மேடையில் பேசிய சாண்டி
விழா மேடையில் பேசிய சாண்டி

சாண்டியின் நடனத்தில் உருவாகியுள்ள 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்' ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 23) சென்னையில் நடைபெற்றது. இதில் சாண்டி, அரவிந்த்சாமி, நக் ஷா, கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆல்பத்துக்கு லியோ பாடல் எழுதி இசையமைக்க, கார்த்திக் இயக்கியுள்ளார். ஆல்பத்தை கிருத்திகா உதயநிதி வெளியிட அரவிந்த்சாமி பெற்றுக்கொண்டார்.

விழாவில் கிருத்திகா உதயநிதி பேசுகையில், “நானும் சில சுயாதீன இசை ஆல்பத்தை இயக்கியுள்ளேன். தற்போது இதுபோன்றவைதான் வளர்ந்து வருகின்றன. சாண்டியின் "செம போதை" பாடல் எனக்கு பிடிக்கும். இதனை சொன்னால் சர்ச்சை ஆகும்" என்றார். அவர் பேசியதைத் தொடர்ந்து, சாண்டி இந்த பாடல் குறித்து மனம் திறந்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

விழா மேடையில் பேசிய சாண்டி

அப்போது அவர் பேசுகையில், “பாடலை பாடி ஆடியுள்ள நக் ஷா மிக திறமையானவர். ஆனால், இவருக்கு நடனம் சுத்தமாக தெரியாது. இந்த பாடலுக்காகத்தான் நடனம் கற்றுக்கொண்டார். நான் பாடலுக்காக யாருக்கும், ஒரு மாதத்திற்கு மேல் நடனம் கற்றுக் கொடுத்ததில்லை. நன்றாக கற்றுக்கொண்டு ஆடியுள்ளார். நக் ஷாவிற்கு வாழ்த்துகள்” என்றார்.

இதையும் படிங்க: 'பருத்திவீரன்' 15ஆம் ஆண்டு நிறைவு; ட்விட்டரில் கார்த்தி நெகிழ்ச்சி பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.