தோனி படம் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி, சமீபத்தில் வெளியான கபீர் சிங் படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கில்ட்டி' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிவுள்ளது.
இதை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்த படக்குழு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கியாராவிடம் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ''மீடூவுக்குப் பிறகு உலகம் மாறிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், நாம் இன்னும் அதே உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது வரை வெளியே சொல்ல சங்கடப்பட்டு கொண்டு சொல்லாத விஷயத்தை, பெண்கள் மீ டூவிற்கு பிறகு வெளியே தயக்கமில்லாமல் சொல்ல முன்வந்துள்ளனர்'' என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கியார, ''கில்ட்டி படத்தில் கையெழுத்திடும் போது, இரண்டுபெரிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால் இப்படத்தின் கதை என்னை கவர்ந்ததால் இப்படத்தில் முதலில் நடித்தேன்'' என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் நடக்கும் 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' படத்தின் இசை கோர்ப்பு