பாலிவுட்டில் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தோ கி ஜவணி (indoo ki jawani). அபிர் சென்குப்தா இயக்கியுள்ள திரைப்படத்தில் கியாரா அத்வானி இந்து சென்குப்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கோவிட்- 19 காரணமாக படப்பிடிப்பு வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது இத்திரைப்படத்தின் டீசரை நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க டேட்டிங் ஆப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.